Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 கிரிக்கெட்னா அது டிவில்லியர்ஸ்தான்… ஓப்பனாக சொன்ன நியுசி வீரர்!

Advertiesment
Cricket

vinoth

, வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:44 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக உலக டெஸ்ட் தொடர்கள், டி20, உலகக்கோப்பை என பல தொடர்களில் விளையாடியவர். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடினார்.

இந்நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் மொத்தமாக ஓய்வு பெறுவதாக அவர் 2021 ஆம் ஆண்டு அறிவித்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார். இந்நிலையில் தான் விரைவிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு தன்னுடைய ஒரு கண்ணில் பார்வை மங்கியதுதான் காரணம் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்னமும் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனிடம் உங்களை பொறுத்தவரை சிறந்த டி 20 கிரிக்கெட்டர் யார் என்ற கேள்விக்கு அவர் ஏபி டிவில்லியர்ஸ் பெயரைக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி மட்டும் இதைப் பார்த்திருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயம்… ஷிவம் துபேக்கு நம்பிக்கை அளித்த ரெய்னா!