இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி தன்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்தியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அன்றைய அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் “ஐபிஎல் தொடரிலும், சர்வதேச போட்டிகளிலும் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் போதுதான் சதமடித்துள்ளார்.” என்று பத்திரிக்கையாளர்கள் சொன்ன போது அதற்கு கே எல் ராகுல் சற்று கடுப்போடு பதிலளித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த கே எல் ராகுல் “அதற்காக என்ன செய்ய சொல்கிறீர்கள். நான் வெளியே உட்கார்ந்து கொள்ளவா?. ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.