கிரிக்கெட் இருக்கும் வரை இது இருக்கும்… கேட்ச் கோட்டை பற்றி கே எல் ராகுல்!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (15:29 IST)
இந்திய அணி நேற்று முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோற்றததற்கு பீல்டிங் சொதப்பல்கள் முக்கியக் காரணியாக அமைந்தன.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  41.2 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேஎல் ராகுல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 73 ரன்கள் எடுத்தார். கடைசி 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்ததால் இந்திய அணி குறைவான ஸ்கோரை பெற்றது. 

இதனை அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி அவ்வப்போது விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி சீரான ரன்ரேட்டில் உயர்ந்து வந்தது . ஒரு கட்டத்தில் அந்த அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. வெற்றிக்கு  இன்னும் 50 ரன்களுக்கு மேல் தேவை என்பதால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடிய மெஹிந்தி ஹசன் மிராஸ் அபாரமாக விளையாடி இலக்கை எட்டினார்.

கடைசி விக்கெட்டுக்கு இந்திய அணி சார்பாக நிறைய பீல்டிங் கோளாறுகள் நடந்ததால் வெற்றி கைவிட்டுப் போனது. அப்படி பட்ட நிலையில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் கேட்ச் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முக்கியமானக் கட்டத்தில் கேட்ச்களை விட்டபோது கேப்டன் ரோஹித் ஷர்மா , தன் பொறுமையை இழந்து கடுமையாக அவரைத் திட்டினார்.

இந்நிலையில் கேட்ச் விட்டது பற்றி பேசியுள்ள கே எல் ராகுல் “ அதுதான் கிரிக்கெட். கிரிக்கெட்டில் நாம் எதிர்பார்க்காததைதான் எதிர்பார்க்க வேண்டும். கிரிக்கெட் இருக்கும்வரை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

RCB அணியை விற்க நேரம் குறித்த இங்கிலாந்து நிறுவனம்…! அதானி வாங்குகிறாரா?

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments