Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தேன்… ஆனால் அவர்கள் அற்புதம் செய்துவிட்டார்கள் – கே எல் ராகுல் பாராட்டு!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (07:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

அதன் பின்னர் இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப கடைசி நேரத்தில் இந்திய அணி பவுலர்களின் போராட்ட பேட்டிங் இன்னின்ஸால் ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர். இது இந்திய அணி இந்த போட்டியை இழப்பதில் இருந்து காப்பாற்றி டிராவை நோக்கி செல்ல ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் பேட்டிங் பற்றி பேசியுள்ள கே எல் ராகுல் “9 விக்கெட்கள் விழுந்ததும் நான் பேட் கட்டிக்கொண்டு பேட்டிங் செய்ய தயாராக் இருந்தேன். ஆனால் பும்ராவும் ஆகாஷ் தீப்பும் மிகச்சிறந்த குறிப்பிடத்தக்க இன்னிங்ஸை ஆடி பாலோ ஆனைத் தவிர்த்துவிட்டார்கள்” எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments