Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சி ஆட்டத்தில் அதிரடி அரைசதம்… கே எல் ராகுல் அபாரம்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (10:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் தற்போது நடந்து வருகிறது.

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் பேட் செய்து வரும் இந்திய அணியில் கே எல் ராகுல் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார். 6 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ராகுல் 30 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார். மறுமுனையில் ரோஹித் ஷர்மா 13 ரன்கள் சேர்த்துள்ளார். இந்திய அணி 75 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments