Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சி ஆட்டத்தின் போது கே எல் ராகுலுக்குக் காயம்… மைதானத்தில் இருந்து வெளியேறினார்!

vinoth
வெள்ளி, 15 நவம்பர் 2024 (15:24 IST)
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசக் கிரிக்கெட் ஆடிவந்தாலும், போதுமான அனுபவம் இருந்தும் தேவையான நேரத்தில் கே எல் ராகுலிடம் இருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைப்பதில்லை. அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேதான் நியுசிலாந்து அணிக்கு எதிரான இன்னிங்ஸிலும் நடந்தது.

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடி அவுட்டான போது கே எல் ராகுல் களத்தில் இருந்தார். அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அவர் வழக்கம்போல சொதப்பி மீண்டும் ஒருமுறை தான் ஒரு “choker” என்பதை நிரூபித்தார்.

இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை வாழ்வா சாவா நிலையில் உள்ளது. அவர் முன்னர் இப்போது இருக்கும் கடைசி வாய்ப்பு ‘பார்டர் கவாஸ்கர்’ தொடர்தான். அதன் முதல் போட்டியில் ரோஹித் விளையாடாத பட்சத்தில், தொடக்க ஆட்டக்காரராக ராகுல் களமிறங்குவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்துள்ளார். பந்தைத் தடுத்தாட முயன்ற போது, வலது முழங்கையில் காயமேற்பட்டு உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments