Publish Date: Mon, 13 Feb 2023 (15:21 IST)
Updated Date: Mon, 13 Feb 2023 (15:27 IST)
இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் மோசமான ஆட்டத்திறன் காரணமாக அவரிடம் இருந்த துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் முக்கியத்துவமும் அணியில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கே எல் ராகுலின் ஃபார்ம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முன்னாள் வீரர் வெங்கடேஸ்வர பிரசாத் மற்றும் கபில்தேவ் ஆகியோர், துணைக் கேப்டன் என்ற காரணத்துக்காக பார்மில் இல்லாத ராகுலை அணியில் தொடர்ந்து இடம்பெற செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அதிரடியாகக் கூறிவருகின்றனர்.
திறமையான சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடமில்லாமல் இருந்துவருகின்ற நிலையில், கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பினால் அவர் இடம் பறிபோக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.