Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (16:31 IST)
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுடியில் நடைபெற்றது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர்  லக்னோ அணியிலிருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டார். இது அதிர்ச்சியான ஒன்றாக பார்க்கப்பட்டது. கடந்த 3 சீசன்களாக லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அதனால் அவரை அந்த அணியின் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கே எல் ராகுல் கேப்டன் பதவியை ஏற்க மறுத்த விட்டதாக சொல்லப்படுகிறது.

அணியில் ஒரு வீரராக மட்டுமே தொடர விரும்புவதாக கே எல் ராகுல் தெரிவித்ததாகவும், அதனால் அக்ஸர் படேல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை 18 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

மீண்டும் வேலையைக் காட்டும் ஹாரி ப்ரூக்… ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுமா?

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கனவு அணியை அறிவித்த ஐசிசி… இந்திய வீரர்களில் யாருக்கு இடம்?

மகளிர் ஐபிஎல்.. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள்.. குஜராத்தை வீழ்த்திய மும்பை..!

அடுத்த கட்டுரையில்
Show comments