Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (12:44 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த தொடர் முடிந்ததும் ரோஹித் ஷர்மா ஓய்வறிவிப்பார் என்று தகவல்கள் பரவின. ஆனால் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘நான் இப்போதைக்கு இந்த பார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை’ எனக் கூறி விளக்கமளித்தார். அதையடுத்து ஜடேஜா ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

அதையடுத்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “தேவையில்லாத வதந்திகள் வேண்டாம்” என ஸ்டேட்டஸ் வைத்து பதிலளித்துள்ளார். ஆனாலும் ரோஹித்தும், ஜடேஜாவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

மீண்டும் வேலையைக் காட்டும் ஹாரி ப்ரூக்… ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுமா?

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கனவு அணியை அறிவித்த ஐசிசி… இந்திய வீரர்களில் யாருக்கு இடம்?

மகளிர் ஐபிஎல்.. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள்.. குஜராத்தை வீழ்த்திய மும்பை..!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 வித விளம்பரங்களுக்கு தடை.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments