நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனையடுத்து அந்த அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் ஜோஸ் பட்லருக்கு விருதுகள் குவிந்தது. இந்த தொடரில் அதிக ரன்கள் அதாவது 863 ரன்கள் அடித்ததால் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விருது ஜோஸ் பட்லருக்கு கிடைத்தது.
முன்னதாக பேட் செய்யும் போது வழக்கமாக அதிரடியில் புகுந்து விளையாடும் பட்லர், இந்த போட்டியில் மிகவும் நிதானமாகவே விளையாடினார். ஒரு கட்டத்தில் அவர் அவுட் ஆகி வெளியேறிய போது கடும் அதிருப்தியில் தனது ஹெல்மெட் மற்றும் க்ளவுஸ் ஆகியவற்றை தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிக்காட்டினார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.