Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணிக்கம் போல பதுங்கி பாட்ஷாவாக பாய்ந்த ஜோஸ் பட்லர்… சேஸிங்கில் சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (07:28 IST)
ஐபிஎல் 2024 சீசனின் 31 ஆவது போட்டி நேற்று  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை திணறவைத்தார். அவர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்க்ளை விளாசினார். அவருக்கு துணையாக அங்கிஷ் ரகுவன்ஷி 30 ரன்களும், ரிங்கு சிங் 20 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் கே கே ஆர் அணி 223 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து கொண்டே வந்தது. ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்தார். ஒரு கட்டத்தில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகி வெளியேறிவிட மறுமுனையில் பவுலர்களை வைத்துக் கொண்டே பட்லர் அதிரடியில் இறங்கினார். 36பந்துகளில் அரைசதம் அடித்த பட்லர், 54 பந்துகளில் சதமடித்தார்.

இதன் மூலம் கடைசிப் பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில்லிங் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது ராஜஸ்தான். 
 

தொடர்புடைய செய்திகள்

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments