ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பட்லர் செய்த தவறு… ரிஷப் பண்ட் சாதனை சதம்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (09:22 IST)
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிய வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 125 ரன்கள் சேர்த்து தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சதத்தை பதிவு செய்தார். ஆனால் அவர் ஒரு ரன்னில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எளிமையான ஸ்டம்ப் இட் வாய்ப்பை பட்லர் கோட்டை விட்டார். அந்த தவறு போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது.

வெளிநாடுகளில் இந்திய விக்கெட் கீப்பர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக ரிஷப் பண்ட்டின் 125 ரன்கள் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments