மீண்டும் அறுவை சிகிச்சை.. பெல்ஜியம் செல்லும் ஜோஃப்ரா ஆர்ச்சர்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (13:32 IST)
இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வில்லை. இதனால் அவர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் இப்போது காயம் குணமாகியுள்ள நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விரைவில் நடக்க உள்ள ஒரு நாள் தொடரில் அவர் விளையாட உள்ளார். காயம் காரணமாக மிகப்பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடிய ஆர்ச்சர், இப்போது முழங்கையில் ஒரு மிகச்சிறிய அறுவை சிகிச்சைக்காக பெல்ஜியம் செல்கிறார். அந்த சிகிச்சை முடிந்து சில நாட்களில் அவர் மீண்டும் மும்பை அணியில் இணைவார் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments