Publish Date: Sat, 17 Jun 2023 (07:54 IST)
Updated Date: Sat, 17 Jun 2023 (08:09 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. வழக்கம் போல தங்கள் பேஸ்பால் கிரிக்கெட்டை ஆடிய இங்கிலாந்து அணி விக்கெட்கள் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் அடித்து ஆடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்ளி 61 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுக்க, இடையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதமடிக்க, ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவுக்கு முன்னர் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 398 ரன்கள் சேர்த்திருந்த போது வியக்கவைக்கும் விதமாக கேப்டன் டிக்ளேர் செய்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய ஆடிய ஆஸி அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்களை சேர்த்து ஆட்டத்தை முடித்தது.