Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

vinoth
திங்கள், 28 ஜூலை 2025 (08:08 IST)
மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பான தடுப்பாட்டத்தை ஆடி போட்டியை டிரா செய்தனர். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துணைக் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்  கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தைக் காலில் வாங்கினார். இதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த காயத்தினுடனேயே அவர் அந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி ஆடினார்.

ஆனால் அதன் பிறகு அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இதையடுத்து அவர் அடுத்து நடக்கவுள்ள ஐந்தாவது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்குப் பதில் மாற்று வீரராக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் நாராயணன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயக தலைவர் பட்டியல்.. மோடி தொடர்ந்து முதலிடம்?

இந்திய அணியில் மூன்று சதங்கள்.. போட்டியை டிரா ஆக்கிய மூவரணி.. ஸ்கோர் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments