ஐபிஎல் போட்டிகளில் இருந்து பும்ரா விலகல்? – அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (12:31 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜாஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமாக இருப்பவர் ஜாஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட ஜாஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் தற்போது நடந்து வரும் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ஜாஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருந்தார்.

ஆனால் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முழு ஐபிஎல் சீசனிலும் அவர் இல்லாமல் போவது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பலத்தை குறைக்கும், இது அணிக்கு பின்னடைவாக அமையும் என பலர் கருதுகின்றனர்.

அதேபோல இந்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிகளிலும் பும்ரா பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. ஆனால் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பும்ரா விளையாட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments