Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ஜேசன் கில்லஸ்பி!

vinoth
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (10:08 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார்.  அதன் பின்னர் அவர் தன்னுடைய பதவியையும் துறந்தார். இதையடுத்து குறுகிய காலத்தில் பாகிஸ்தான் அணியில் நிறைய கேப்டன்சி மாற்றங்கள் நடந்தன.

இந்நிலையில் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜேசன் கில்லஸ்பி தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மொத்தமே 42 நாட்கள்தான் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments