Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் என் மண்ணில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்… ரசிகர்களுக்கு ஆண்டர்சன் ஆறுதல்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:44 IST)
தனது சொந்த மண்ணில் விளையாட முடியாமல் போனது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிசியோதெரபி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் இருநாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து இந்த போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்து உள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சொந்த மைதானத்தில் விளையாட முடியாமல் போனது குறித்து வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்த போட்டியைக் காண ரயில், ஹோட்டல் ஆகியவற்றில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்காக நான் வருந்துகிறேன். மீண்டும் என் மண்ணில் நான் விளையாடுவேன் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

எனக்கு 10க்கு 7 மதிப்பெண்தான் கொடுப்பேன்- ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments