Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்… கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

8 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்… கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

vinoth

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:17 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் நான்காவத் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த அவர் தன்னுடைய முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 979 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் சுனில் கவாஸ்கரின் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 938 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக டான் பிராட்மேன் 8 டெஸ்ட் போட்டிகளில் 1210 ரன்களை சேர்த்ததுதான் உலகளவில் இன்றுவரை சாதனையாக அமைந்துள்ளது. பிராட்மேனுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் வீரர்களுடன் இந்த செயல்பாட்டை செய்ததில் மகிழ்ச்சி- ரோஹித் சர்மா