ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

vinoth
சனி, 21 ஜூன் 2025 (07:43 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் சிறப்பானத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ராகுல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, இந்த போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஜோடி சிறப்பான இன்னிங்ஸைக் கட்டமைத்தது.

இருவரும் சதமடித்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்களில் அவுட் ஆக, கில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த இன்னிங்ஸின் போது ஜெய்ஸ்வால் மற்றும் கில் இடையே நடந்த உரையாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் ஜெய்ஸ்வால் கில்லிடம் ‘உனக்கு ரன் ஓட விருப்பம் இல்லை என்றால் சத்தமாக வேண்டாம் என்று சொல். எனக்கு பந்தை அடித்தவுடன் ஓடும் பழக்கம் உள்ளது” என சற்று காட்டமாகக் கூறினார். இந்த உரையாடல் இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments