Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட்டை காலி பண்ணுனதே ஜெய்ஷாதான்! – முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (17:07 IST)
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி நீக்கியது குறித்து பேசிய இலங்கை முன்னாள் கேப்டன் இதற்கு காரணம் ஜெய்ஷாதான் என குற்றம் சாட்டியுள்ளார்.



கிரிக்கெட் பிரபலமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை கிரிக்கெட் வாரியம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதுடன் இலங்கை அணி வீரர்கள் ஆசியக்கோப்பை, உலக கோப்பை என பல போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். சமீபமாக பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் கிரிக்கெட் வாரியத்தின் மீது அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன் வைத்து ஐசிசி நிர்வாகம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான அர்ஜூன ரனதுங்க “பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது பதவியை பயன்படுத்தி இலங்கை அணியை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அணி அழிக்கப்படுகிறது” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments