அடுத்தடுத்து பவுண்டரி & சிக்ஸ்.. அதே ஓவரில் கோலியை அவுட் ஆக்கி இஷாந்த் ஷர்மா செய்த சேட்டை!

vinoth
திங்கள், 13 மே 2024 (07:25 IST)
நேற்று பெங்களூருவில் நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்.  அந்த அணியின் கோலி, ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து 188 என்ற இலக்கை நோக்கி விளையாடிய  டெல்லி அணி 19.1 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்த வெற்றியின் மூலம் ஆர் சி பி அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசமாக்கியுள்ளது.

இந்த போட்டியில் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த போது தனது பள்ளிக்கால நண்பரான இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இஷாந்த் ஷர்மா அவரை கேலி செய்யும் விதமாக அவரை தொடர்ந்து சென்று அவரை இடித்து ஸ்லெட்ஜ் செய்தார். அதை கோலி தலைகுணிந்து சிரித்தவாறே ரசித்து சென்றார். கோலி அவுட் ஆவதற்கு முன்பாக அந்த ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடித்து இஷாந்த ஷர்மாவிடம் ஏதோ கேலியாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments