இந்திய அணியில் சமீபத்தைய சில ஆண்டுகளாக வாய்ப்புகள் பெற்று வருகிறார் இஷான் கிஷான். பங்களாதேஷ் அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தையே இரட்டை சதமாக மாற்றினார். ஆனாலும் அவருக்கான இடம் இந்திய அணியில் இன்னும் நிரந்தமராகவில்லை.
அதே போல தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவாரா இல்லை நான்காவது வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
அதில் “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடரின் போது விடுப்பு வேண்டும் எனக் கேட்ட இஷான் கிஷான் அதன்பிறகு துபாய்க்கு சென்று விடுமுறையைக் கழித்தார். ஆனால் அதன் பிறகு தற்போது நடந்து வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்திய அணியில் இடம் கிடைக்காததால் அவர் விரக்தி அடைந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.