Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் திடீர் விலகல்! என்ன காரணம்?

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (13:16 IST)
இன்று நடைபெறும் ஆஸ்திரேலியா – இந்தியா மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து முக்கிய இந்திய வீரர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. எனினும் இன்றைய போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனான இஷான் கிஷன் இந்த போட்டியிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த போட்டியில் விளையாடவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே விளையாடி வருவதால் இஷான் கிஷன் இல்லாவிட்டாலும் மிடில் ஆர்டரில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்திய அணி சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments