Publish Date: Wed, 04 Dec 2024 (07:49 IST)
Updated Date: Wed, 04 Dec 2024 (07:54 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால் பலரும் புதுப்பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் ராகுல் சிறப்பாக இருக்கிறார். அதனால் அவரையே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வைக்கவேண்டும் எனக் கூறி வருகின்றனர். ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நாளை டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, காலில் கட்டுடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அவர் காயம் அடைந்துள்ளாரா? அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.