Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த சீசனோடு தோனிக்கு எண்ட் கார்டா? சிஎஸ்கே முக்கிய நிர்வாகி பகிர்ந்த தகவல்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (14:20 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி அவருக்குப் பதிலாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பொறுப்பு இப்போது ரவீந்தர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனி ஒரு வீரராக அணிக்குள் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக தோனி மட்டுமே 12 சீசன்களாக பொறுப்பேற்றிருந்தார். அதில் 4 சீசன்களில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரே ஒரு முறை தவிர மற்ற அனைத்து தடவையும் ப்ளே ஆஃப் சுற்றை தாண்டி சென்றுள்ளது.

தற்போது 40 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் சி எஸ் கே அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதால் இதுவே கடைசி சீசனாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக அணியை தயார் படுத்தவே தோனி இருக்கும்போதே ஜடேஜாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ‘தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என நான் நினைக்கவில்லை. அவர் இந்த சீசனை கடந்தும் விளையாடுவார்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments