Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளிலும் கழட்டிவிடப்படுகிறாரா ரோஹித் ஷர்மா?

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (10:48 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மைதானத்திலேயே கண்கலங்கினார்.

தற்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடுவார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதையடுத்து இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ள சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை.

ஏற்கனவே டி 20 போட்டிகளுக்கான அணியில் இருந்து அவர் பிசிசிஐ யால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஒருநாள் போட்டிகளிலும் அவரை கழட்டி விட பிசிசிஐ முடிவு செய்கிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்த உலகக் கோப்பையை மனதில் வைத்துக்கொண்டு புதிய இந்திய அணியைக் கட்டமைக்க இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments