Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடக்காதா?... கர்நாடக கிரிக்கெட் சங்கம் கொடுத்த பதில்!

vinoth
சனி, 16 மார்ச் 2024 (07:59 IST)
ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இத்தனைக்கும் இந்த அணி இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களின் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும்.

ஆனால் இம்முறை அவர்களுக்கு அந்த ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது போலிருக்காது. ஏனென்றால் இந்த ஆண்டு பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டிகளை அங்கு வைத்தால் அதிகளவில் தண்ணீர் பயன்பாடு இருக்கும் என்பதால், இப்போது ஆர்சிபி அணியின் போட்டிகளை வேறு ஏதேனும் ஒரு மைதானத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இந்த தகவலை கர்நாடக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. தண்ணீர் பிரச்சனையால் ஐபிஎல் போட்டிகள் பாதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இது பெங்களூர் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் அந்த வீரரை எடுங்கள்.. சிஎஸ்கே அணிக்கு அறிவுரை சொன்ன தோனி!

மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணியில் இந்த ஸ்டார் ப்ளேயர் இல்லையா?

அணிதான் முக்கியம்… தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்த ஷுப்மன் கில்!

ரிஷப் பண்ட் மட்டும் ஏலத்துக்கு வந்தால்…? ஆகாஷ் சோப்ரா சொன்ன தொகை!

நாயகன் மீண்டும் வர்றான்… கேப்டன் பதவியை ஏற்கிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments