Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் மினி ஏலம்… இந்திய வீரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (09:42 IST)
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 சீசன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த போட்டிகளில் 10 அணிகள் போட்டியிட்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைகாட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு ஐபிஎல் தொடரில் அதிக கவனம் செலுத்தி விளையாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் 23 ஆம் தேதி கோவாவில் நடக்க உள்ளது. இதற்காக 991 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த ஏலத்தில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் இந்த ஏலத்தில் பதிவு செய்துகொண்டுள்ள இந்திய வீரர்களில் ஒருவருக்குக் கூட அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்படவில்லை.  அதைவிட குறைந்த விலைக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

இந்திய அணியின் ட்ரம்ப் கார்டே அந்த வீரர்தான்… சுரேஷ் ரெய்னா சொல்லும் ஆருடம்!

அமெரிக்கா கிளம்பிய கோலி… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments