ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்?.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

vinoth
வியாழன், 22 பிப்ரவரி 2024 (09:51 IST)
2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் இப்போது உலகளவில் அதிகளவில் பணமழை கொட்டும் கிரிக்கெட் தொடராக உருவாகியுள்ளது.  இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும்  என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியாவில் ஐபிஎல் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. அல்லது வெளிநாட்டில் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால் இந்தியாவில்தான் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் தலைவர் அருண் தோவல் அறிவித்துள்ளார். இன்று ஐபிஎல் தொடருக்கான முதல் கட்ட அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதை அடுத்து முதல் போட்டியில் சிஎஸ் கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments