Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதனை மேல் சோதனை! விராட் கோலிக்கு அபராதம்! – அதிர்ச்சியில் ஆர்சிபி!

Advertiesment
IPL 2020
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (10:22 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதின. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி மிகவும் மோசமாக விளையாடியது அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மைதானத்தில் பந்து வீசுவதற்கு ஆர்சிபி அணியினர் கால தாமதம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. நேர விரயம் செய்த குற்றத்திற்காக கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

ஏற்கனவே ஆர்சிபி தோல்வியடைந்ததில் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த அபராதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னைக்காவது முதல் ஆளா களம் இறங்கு தல! – தோனிக்கு ரசிகர்கள் அட்வைஸ்!