Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IPL 2024: ஹோம் க்ரவுண்டில் வைத்து சிஎஸ்கேவை வெல்லுமா ஆர்சிபி? – CSK vs RCB இன்று மோதல்!

Advertiesment
CSKvRCB

Prasanth Karthick

, வெள்ளி, 22 மார்ச் 2024 (09:27 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்று தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ளும் நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் இன்று தொடங்குகிறது. ஆரம்ப போட்டியே நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணிக்கும், ஆர்சிபி அணிக்கும் இடையே என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெரும்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸை அதன் ஹோம் க்ரவுண்டான சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து தோற்கடிப்பது கடினம். ஆர்சிபி அணி கடந்த 2008ம் ஆண்டில் ஒருமுறை இதை சாதித்தது. அதன்பின்னர் இத்தனை வருடங்களில் ஆர்சிபியால் சிஎஸ்கேவை ஹோம் க்ரவுண்டில் வீழ்த்த முடியவில்லை. இதுவரை 30 முறை CSK – RCB அணிகள் நேருக்குநேர் மோதிக் கொண்டுள்ள நிலையில் சிஎஸ்கே 20 முறை வெற்றியும், ஆர்சிபி 10 முறை வெற்றியும் பெற்றுள்ளது.


இந்த முறை சிஎஸ்கே அணி கேப்டனாக தோனி இல்லாததால் அணி ஃபார்முக்கு வர காலம் எடுக்கலாம் என கணிக்கப்படுகிறது. ருதுராஜ் சிறந்த கேப்பிட்டன்சியை அளிப்பார் என்ற நம்பிக்கை இருந்தாலும், தோனி பெற்ற இத்தனை ஆண்டுகால கேப்பிட்டன்சி அனுபவம் ருதுராஜுக்கு இல்லை என்பது அணியின் பலவீனமாக அமையுமா என்ற கேள்வியும் உள்ளது. ஆனால் புதிதாக அணிக்குள் களமிறங்கியுள்ள நியூசிலாந்து வீரர்கள் டேரில் மிட்ச்செல், ரச்சின் ரவீந்திரா போன்றோரின் முந்தைய அதிரடி ஆட்டங்கள் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து வருகிறது.

ஆர்சிபி அணியை பொறுத்தவரை சிஎஸ்கேவின் எல்லைச்சாமியாக விளங்கிய ஃபாப் டூ ப்ளெசிஸ் கேப்பிட்டன்சியில் இலகுவாக பயணித்து வருகிறது. ஆர்சிபியின் விராட் கோலி, டூ ப்ளசிஸ், மேக்ஸ்வெல் என்ற மும்மூர்த்திகளின் KGF (Kohli, Glen, Faf) கூட்டணி கடந்த ஆட்டங்களில் கலக்கியது போல இப்போது சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 6.30 மணிக்கு தொடக்க விழாவுடன் போட்டிகள் தொடங்க உள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்து போட்டி 8 மணி அளவில் தொடங்க உள்ளது இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமா செயலியில் பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த சகாப்தத்தை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்- தோனிக்கு கோலியின் வாழ்த்து!