Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் வெற்றி யாருக்கு? மும்பை இந்தியன்ஸோடு பலப்பரீட்சை நடத்தும் ஐதராபாத்… டாஸ் அப்டேட்

vinoth
புதன், 27 மார்ச் 2024 (19:09 IST)
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. அதையடுத்து சில நாட்களாக விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வருகின்றன. அனைத்து அணிகளும் ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் இந்த வாரத்தில் இரண்டாவது போட்டிகளில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்கள் முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளுமே இன்று மும்முரமாக விளையாடும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸை வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு பதில் உனாட்கட்  இணைந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்
இஷான் கிஷன்(w), ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(c), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா

சன் ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் லெவன்
டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(w), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(c), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments