Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழாவில் இன்று ஐதராபாத் vs பஞ்சாப்… யாருக்கு வெற்றி வாய்ப்பு?

vinoth
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (09:50 IST)
17 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளை விளையாடியுள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ ஆகிய நான்கு அணிகள் முன்னணியில் உள்ளன.

இன்னும் நிறைய போட்டிகள் உள்ளதால் புள்ளி பட்டியலில் மாற்றம் இருக்கலாம். இந்நிலையில் இன்று சண்டிகாரில் நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்றுள்ளன.

சன் ரைசர்ஸ் அணி இந்த சீசனில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக உருவாகியுள்ளது. அந்த அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஹெண்ட்ரிச் கிளாசன் ஆகியோர் அபார ஃபார்மில் உள்ளனர். அதுபோல பவுலிங்கில் பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார் என பலமிக்கதாக உள்ளது.

பஞ்சாப் அணியை எடுத்துக்கொண்டால் ஷிகார் தவான், லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரை அந்த அணி சார்ந்துள்ளது. பவுலிங்கில் ஸ்டார் பவுலர்கள் இல்லை என்றாலும் இளம் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments