Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SRHvMI: சீன் போடாம விளையாடுங்க.. பேட் கம்மின்ஸ் ஒரு மாதிரி! – ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Prasanth Karthick
புதன், 27 மார்ச் 2024 (11:12 IST)
IPL 2024 இன்று மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே போட்டி நடைபெற உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக் கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



ஐபிஎல் 2024 சீசன் தொடங்கி போட்டிகள் களைகட்டி வருகின்றன. அந்த வகையில் இன்று ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது.

இரண்டு அணிகளுக்குமே இது இரண்டாவது போட்டி என்றாலும், இரு அணிகளுமே முதல் போட்டியில் வெற்றிபெறவில்லை. அதனால் இந்த போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளுமே தீவிரம் காட்டும் வாய்ப்புள்ளது.

சன்ரைசர்ஸ் ஸ்குவாடில் கேப்டன் பேட் கம்மின்ஸ், மயங்க் அகர்வால், ஹென்ரிக் க்ளாசன், ட்ராவிஸ் ஹெட் என நல்ல பேட்டிங் பெரிய கைகள் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ரோகித் சர்மா, திலக் வர்மா, இஷான் கிஷன் என பேட்டிங் ஆர்டர் நல்ல ஃபார்மில் உள்ளது.

ALSO READ: CSK அணிக்கு கிடைத்த புது எல்லைச்சாமி..! டூ ப்ளெசிஸ் இல்லாத குறையை தீர்த்த ரச்சின் ரவீந்திரா!

ஆனால் கேப்பிட்டன்ஷிப் வகையில் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமை தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. கடந்த போட்டியில் முதல் ஓவரை பும்ராவுக்கு தராமல் கேப்டன் என்ற அனுகூலத்தால் தானே எடுத்துக் கொண்டு பந்து வீசியது, ரோஹித் சர்மாவை ஃபீல்டிங்கில் ஆங்காங்கே ஓட விட்டது. ரோஹித் இதுவரை ஃபீல்டில் நிக்காத பவுண்டரி லைனில் நிற்க வைத்தது. இதெல்லாம் போதாது என்று கேமரா கேப்டனான தன்னை நோக்கி திரும்புகிறது என்பதற்காகவே விதம் விதமான ஆட்டிடியூட் காட்டியது, கடைசி ஓவர்களில் தோனி போல இறங்கி வின்னிங் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தது என ஹர்திக் பாண்ட்யாவை இன்ச் பை இன்ச்சாக வறுத்து எடுத்து விட்டார்கள் ரசிகர்கள்.



இன்று சன்ரைசர்ஸ் அணியில் கேப்டனாக இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ், ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்பட்டு ‘இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சிப்பேன்’ என சொல்லி, கோப்பையை வென்று அதை செய்தும் காட்டியவர். ஐபிஎல் அணிகளில் சன்ரைசர்ஸ் அவ்வளவு வலுவான அணி இல்லை என்றாலும், முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியின் 208 என்ற பெரிய டார்கெட்டை சிறப்பாக சேஸ் செய்து 204 வரை வந்து தோல்வி அடைந்தனர். அதனால் அணியில் பேட் கம்மின்ஸின் கேப்பிட்டன்சி செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவே பேசப்படுகிறது. மேலும் இந்த சீசன் தொடங்கி இதுவரை அனைத்து அணிகளுமே அதன் ஹோம் க்ரவுண்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று ஹைதராபாத்தும் அதன் ஹோம் க்ரவுண்டான ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில்தான் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

ஹர்திக் பாண்ட்யா இதையெல்லாம் கணக்கில் கொண்டு அணிக்கும் காழ்ப்புணர்ச்சிகளை தவிர்த்து சீனியர்களுக்கு உரிய மரியாதை அளித்து, முறையாக கேப்பிட்டன்சி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments