Publish Date: Fri, 20 May 2022 (21:22 IST)
Updated Date: Fri, 20 May 2022 (21:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 68வது லீக் போட்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இதில்,கான்வே 16 ரன்களும், மொயீன் அலி 93 ரன்களும், ராயுடு 3 ரன்களும், தோனி 26 ரன்களும் அடித்தனர்.
எனவே 5விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 150 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.