Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (23:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இருபத்தி மூன்றாவது போட்டி இன்று மும்பை  மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி முதலில்  பேட்டிங் செய்தது.

இதில், மயங்க் அகர்வால் 52 ரன்களும், தவான் 70 ரன்களும்,  பாரிட்ஷா 12 ரன்களும், ஷர்மா 30 ரன்களும்,  ஷாருக்கான் 15 ரன்களும் அடித்து, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்து            மும்பை அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியில், பிரீவிஸ் 49 ரன் களும், சூர்யகுமார் 43 ரன்களும், வர்மா 36 ரன் களும் அடித்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தனர்.

எனவே, பஞ்சாப் அணி 12 ரன்கள்  வித்தியாசத்தில்             மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments