Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2020 ; இன்று பஞ்சாப் லெவன் அணியுடன் கொல்கத்தா ரைடர்ஸ் அணி மோதல் ! ஃப்ளே ஆப் சுற்றுக்குபோவது யார் ?

Advertiesment
ஐபிஎல்-2020 ; இன்று பஞ்சாப் லெவன் அணியுடன் கொல்கத்தா ரைடர்ஸ் அணி மோதல் ! ஃப்ளே ஆப் சுற்றுக்குபோவது யார் ?
, திங்கள், 26 அக்டோபர் 2020 (16:41 IST)
13 வது ஐபிஎல் - 2020  கிரிக்கெட் தொடர்  வெகுவிமரிசையாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று 46 வது லீக் ஆட்டம் சார்ஜாவின் நடைபெறவுள்ளது. இன்று இரவு 7: 30 மணிகு நடைபெறும் இந்தப் போட்டியில்  மார்க்ன தலைமையிலான கொல்கத்தா நைட்ரடர்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

கொல்கத்தா அணி  இதுவரை 6 வெற்றி,  5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிபெற கட்டாயமாக இன்று கொல்கத்தா அணி வெற்றிபெறவேண்டிய நிலையில் உள்ளது.

பஞ்சாப் அணி 5 வெற்றி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நல்ல ஃபாமில் உள்ளது. இன்று இந்த அணி அதிரடி காட்டி தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பஞ்சப் அணியும் பிளே ஆப்  சுற்றுக்குத் தகுதி பெற இன்று வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்களில் கொல்கத்தா 18 –ல் வெற்றி பெற்றுள்ளது., பஞ்சாப் அணி 8 ல் வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைதானத்தில் மண்டியிட்டு Black live matter இயக்கத்துக்கு ஆதரவைத் தெரிவித்த பாண்ட்யா!