இந்திய அணிக்கு இப்போது இப்படி ஒரு கேப்டன்தான் தேவை… இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (08:13 IST)
இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இருந்து வெளியேறியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.

இதையடுத்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றும் பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் “இந்திய அணிக்கு இப்போது இயான் மார்கன் போன்ற ஒரு கேப்டன்தான் தேவை. 20 ஓவர்களும் அடித்து விளாசிவிட்டு வாருங்கள் என்று கூறும் அவர் போன்ற ஒரு கேப்டன்தான் தேவை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments