இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் உலக கோப்பை சாம்பியன்ஷிப் செல்லும் இந்திய அணிக்கான கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து அனைத்து நாட்டு வீரர்களும் அவரவர் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இதற்காக லண்டன் செல்ல உள்ள இந்திய அணிக்கு கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் 3 முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்வதுடன் மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.