Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை ; ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணி 2 வது வெற்றி !

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (22:54 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்தது.

இதில், கே.எல்.ராகுல் 36 ரன்களும், ரோஹித் சர்மா 21 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68(26) ரன்களும் அடித்தனர்..

3 ஆண்டு காலமாக எந்த போட்டியிலும் சோபிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோலி, இன்று ஹாங்ஹாங் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து, ஹாங்காங் அணிக்கு 193 ரன் கள் வெற்றி இலக்காக  நிர்ணயித்தது.

 இதையடுத்து விளையாடிய ஹாங்காங் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பியதாலும்  அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெ இழந்ததாலும், 20 ஓவர்கள் முடிவில் 152  ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தோற்றது. இந்திய அணி 40 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணி வெற்றி பெற்று, தன் 2 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments