350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

vinoth
செவ்வாய், 24 ஜூன் 2025 (11:46 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில்  முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 465 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது. இந்திய வீரர்களான ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இலக்காக 371 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று நான்காம் நாளில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இன்று ஐந்தாம் நாளில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் சேர்க்க வேண்டும். கையில் 10 விக்கெட்கள் வைத்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இதுவரை தோற்றுள்ளது. 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் 42 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் சமனும் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments