இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

vinoth
செவ்வாய், 24 ஜூன் 2025 (09:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில்  முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 465 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது. இந்திய வீரர்களான ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

நான்கு நாட்கள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி ஐந்தாம் நாளில் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நேற்றைய ஆட்டத்தை முடித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் 100 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வீரரும் படைக்காத சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட் சதமடித்தார். இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் இங்கிலாந்து மண்ணில் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. இதன் மூலம் தன் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார் பண்ட்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments