Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தவான் விலகல்: மயங்க் சேர்ப்பு!

Advertiesment
டெஸ்ட் போட்டிகளில் இருந்து தவான் விலகல்: மயங்க் சேர்ப்பு!
, புதன், 11 டிசம்பர் 2019 (16:01 IST)
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் அணியில் தவான் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு டி20 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணியும் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இன்று மாலை மூன்றாவது டி20 ஆட்டம் தொடங்க இருக்கிறது. இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறுகிறது என்பதை பொறுத்தே டி20 வெற்றி தீர்மானிக்கப்படும்.

இதற்கு பிறகான மூன்று ஒருநாள் போட்டிகளில் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் 15ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஷிகார் தவான் தற்போது விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பையின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகார் தவான் அதிகம் ஓய்வெடுத்து விளையாட வேண்டிய நிலை உள்ளது. சென்ற வங்கதேச டெஸ்ட்டில் மயங்க் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்ததால் இந்த தொடரிலும் அவரது அபாரமான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மித் கரையான் போல வேலை செய்கிறார் – இயான் சேப்பல் காட்டமான விமர்சனம் !