Webdunia - Bharat's app for daily news and videos

Install App

INDvsNZ: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (16:30 IST)
ஹாமில்டனில் நடந்த 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. 
 
இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையே 2வது  டி20 போட்டி கடந்த 26 நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  கேப்டன் வில்லியன்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட்  இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65, விராட் கோலி 38, ராகுல் 27 ரன்கள் எடுத்தனர்.  இதனால் இந்திய அணி, 5 விக்கெட்  இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியில் மற்ற வீரர்கள் வழக்கம்போல விளையாட கேப்டன் வில்லியம்ஸன் மட்டும் இந்திய பவுலர்களை நாலாப்புறமும் கிழித்தெடுத்தார். இதனால் அந்த அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 
 
அதனால் வெற்றி என்ற நிலையில் ஷமி வீசிய முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார் டெய்லர். அடுத்த பந்தில் வில்லியம்சன் அவுட் ஆக ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கடுத்த பந்தில் ரன்கள் எடுக்க முடியவில்லை. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க கடைசி பந்தில் டெய்லர் அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. 
 
எனவே சூப்பர் ஓவர் மூலம் முடிவை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 17 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மாவும், ராகுலும் எளிதாக சூப்பர் ஓவரில் வெற்றியை கைப்பற்றி கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்த் மண்ணி டி20 தொடரை வென்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments