Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2012ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்தியா!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2016 (17:46 IST)
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.


 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் ஜோ ரூட் 124 ரன்கள், மொயின் அலி 117 ரன்கள் ஜோ ரூட் 124 ரன்கள் பென் ஸ்டோக்ஸ் 124 ரன்கள் குவித்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 488 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக, புஜாரா 124 [17 பவுண்டரிகள்] ரன்களும், முரளி விஜய் 126 [9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்] ரன்களும் எடுத்தனர்.

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிவடைந்தபோதும் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 70 ரன்கள் குவித்து அணி ஓரளவு சிறப்பான நிலையை எட்ட உதவினார்.

பிறகு, இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஜோடிகள் 180 ரன்கள் குவித்தது. ஹசீப் ஹமீது 82 ரன்களும் எடுத்து வெளியேறினர். தொடர்ந்து ஜோ ரூட் 4 ரன்களிலும்,  கேப்டன் அலைஸ்டர் குக் 120 ரன்களிலும் வெளியேற இங்கிலாந்து அணி 260 ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதனால், முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் பின்தங்கிய இந்திய அணிக்கு 310 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ரன் எடுப்பதற்குள்ளேயே கவுதம் கம்பிர் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

ஆனால், முரளி விஜய், புஜாரா இணை நேர்த்தியாக இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டது. பின்னர் புஜாரா 18 ரன்களிலும், முரளி விஜய் 31 ரன்களிலும், ரஹானே 1 ரன்னிலும் வெளியேற 71 ரன்களுக்குள் 4 விக்கெட் என்றானது.

ஆனால், கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார். ரவீந்திர ஜடேஜாவும் நல்ல பாட்னர்ஷிப் கொடுத்து ஆடினார். ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

2012ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை வெற்றி, தோல்வி இன்றி இந்தியா அணி டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இடையில், பெங்களூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments