Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை தக்க வைக்குமா? - இந்தியாவிற்கு 310 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2016 (13:34 IST)
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணிக்கு 310 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.


 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் ஜோ ரூட் 124 ரன்கள், மொயின் அலி 117 ரன்கள் ஜோ ரூட் 124 ரன்கள் பென் ஸ்டோக்ஸ் 124 ரன்கள் குவித்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 488 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக, புஜாரா 124 [17 பவுண்டரிகள்] ரன்களும், முரளி விஜய் 126 [9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்] ரன்களும் எடுத்தனர்.

நேற்று நான்காவது நாளில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே ரஹானே 13 ரன்களிலும், விராட் கோலி 40 ரன்களிலும், விருத்திமான் 35 ரன்களிலும், ஜடேஜா 12 ரன்களிலும், உமேஷ் யாதவ் 8 ரன்களிலும் வெளியேறினர்.

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிவடைந்தபோதும் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 70 ரன்கள் குவித்து அணி ஓரளவு சிறப்பான நிலையை எட்ட உதவினார்.

பிறகு, இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஜோடிகள் 180 ரன்கள் குவித்தது. ஹசீப் ஹமீது 82 ரன்களும் எடுத்து வெளியேறினர். தொடர்ந்து ஜோ ரூட் 4 ரன்களிலும்,  கேப்டன் அலைஸ்டர் குக் 120 ரன்களிலும் வெளியேற இங்கிலாந்து அணி 260 ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதனால், முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் பின்தங்கிய இந்திய அணிக்கு 310 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக சொந்த மண்ணில் வெற்றி பெற்றுவரும் நிலையில் இந்த இலக்கு சவாலானதாக அமையும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments