Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

Advertiesment
இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

vinoth

, சனி, 15 ஜூன் 2024 (11:28 IST)
நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இன்று இந்திய அணி ஃப்ளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் கனடா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நடைபெறும் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. அதனால்தான் நேற்று நடக்க இருந்த பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது.

இந்நிலையில் வெளியாகியுள்ள வானிலை அறிக்கையின் படி போட்டி நடக்கும் நேரத்தில் (அமெரிக்காவில் காலை 10.30 மணி) மழையளவு குறைவாகவே இருக்கும் என்றும் ஆனால் அதற்கு மூன்று மணிநேரம் முன்புவரை நல்ல மழை பெய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானத்தில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகள் தாமதம் ஆவதால் போட்டி மழையால் பாதிக்கப்பட கணிசமான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!