Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நான்காவது டி 20 போட்டி… தொடரை வெல்லுமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:31 IST)
இந்தியாவில் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளிலுமே முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் மட்டுமே விளையாடினாலும், இதுவரை நடந்த போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக அமைந்தன.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியையும் வென்றுள்ளது. இன்று நான்காவது போட்டி ராய்ப்பூரில் நடக்க உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் களம் காண்கிறார். அதனால் அவருக்காக எந்த வீரர் பென்ச்சில் உட்காரவைக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் கிளன் மேக்ஸ்வெல் தாயகம் திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியை இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் என்பதால் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 தொடரில் இந்திய அணி படைத்த புதிய சாதனை… பெட்டிப்பாம்பாய் அடங்கிய UAE!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: UAE அணியை பந்தாடிய இந்திய வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரானப் போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்… UAE கேப்டன் நம்பிக்கை!

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக் கோப்பை தொடர்.. தேதி அறிவிப்பு!

ஆசிய கோப்பை முதல் போட்டி.. ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.. இன்று இந்திய போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments