Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீழ்ந்து எழுந்த இங்கிலாந்து அணி நிதான ஆட்டம் - மொய்ன் அலி சதம்

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (18:48 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.


 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆனால், தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கேட்டோன் ஜென்னிங்ஸ் 1 ரன்னிலும், கேப்டன் குக் 10 ரன்களிலும் வெளியேறினர். இதனால், 21 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது.

பின்னர் ஜோ ரூட் மற்றும் மொய்ன் அலி கூட்டணி அணியை தூக்கி நிறுத்தியது. அணியின் ஸ்கோர் 167ஐ தொட்டபோது ரூட் 88 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பைர்ஸ்டோ 1 ரன்னில் அரைச்சதத்தை தவறவிட்டார். அவர் 49 ரன்களில் வெளியேறினார்.

அபாரமாக ஆடிய மொய்ன் அலி சதம் விளாசினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. மொய்ன் அலி 120 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

ஓராண்டுக்குப் பிறகு நாளை கிரிக்கெட் களம் காண்கிறார் ஷமி!

அடுத்த கட்டுரையில்
Show comments